1st ரூ. 1 லட்சம்….. 2nd ரூ. 50 ஆயிரம்….. 3rd ரூ. 25 ஆயிரம்…. பிரதமரின் பரிசு …!!

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரிகள் , வணிக வளாகங்கள் , விளையாட்டு அரங்கங்கள் தியேட்டர்கள் அனைத்தையும் மூட மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.  மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில் கொரோனா தடுப்பு குறித்து நல்ல ஆலோசனை வழங்குங்கள் என்று (https://innovate.mygov.in/covid19/) என்ற இணையத்தை பகிர்ந்து நாட்டுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி , நல்ல தீர்வு சொல்பவர்களுக்கு பரிசுத்தொகையும் அறிவித்துள்ளார். அதில் 1ஆம் பரிசாக ரூ 1 லட்சமும் , 2ஆம் பரிசு ரூ 50 ஆயிரமும் , 3ஆவது பரிசாக ரூ 25 ஆயிரமும் வழங்கப்படுமென்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.