1_ஆ …. 2_ஆ …. 3_ஆ … 6 ஹாஷ்டாக் ….. இந்தியளவில் ட்ரெண்டிங்….. பிறந்தநாள் கொண்டாடும் தோனி…!!

இந்திய கிரிக்கெட் அணியின் தோனி இன்று தனது 38_ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் உலகளவில் அவருக்கு வாழ்த்து குவிந்து வருகின்றது.

இந்திய அணியில் விக்கெட் கீப்பராக அறிமுகமாகி உலகளவில் தன்னை மிஞ்ச எவராலும் முடியாது என்று தன்னை நிலை நிறுத்திக் கொண்ட தோனி. தனது தலைமையின் கீழ் இந்திய அணிக்கு 50 ஓவர் உலக கோப்பை , T 20 உலக கோப்பை மற்றும் மினி உலக கோப்பை என அடுத்தடுத்து 3 ICC கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.

டோனி தனது மின்னல் வேக ஸ்டெம்பிங் திறனால் எதிரணி வீரர்களை நடுங்க செய்தார். இக்கட்டான சூழலில் பொறுமையாக இருந்து விக்கெட் எடுக்கும் யுக்தியை வகுத்த்து கூல் கேப்டன் என்று புகழப்பெற்றார்.இந்திய கிரிக்கெட் அணியை அசைக்க முடியாத இடத்துக்கு கொண்டு சென்ற தோனி IPL_லிலும் தனது ராஜ்யத்தை விடவில்லை.

IPL தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி சென்னை அணியை புதிய உச்சம் தொட வைத்தவர் டோனி. இதனால் இவர் தல தோனி என தமிழக ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். இந்திய அணியின் ஜொலிக்கும் முகமாக விளங்கிய தோனி நடந்து வரும் உலக கோப்பையில் பல்வேறு விமர்சனத்துக்கு ஆளாக்கப்பட்டார்.

தோனியின் ஆட்டத்திறன் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் தோனி ஓய்வு பெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி இந்திய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.இந்நிலையில் இன்று தன்னுடைய 38_ஆவது பிறந்தநாளை தோனி கொண்டாடி வருகின்றார்.

தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ரசிகர்களின் வாழ்த்து மழையில் தோனி நனைந்து வருகின்றார். எவ்வளவு விமர்சனம் வந்தாலும் தோனின் சாதனையை அவரின் பிறந்தநாள் வாழ்த்தாக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பல்வேறு ஹாஷ்டாக்_களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட   #HappyBirthdayDhoni,   #HappyBirthdayMSD , #MSDhoni , #MSD38 , #CaptainCool ,   Mahi என்ற 6 ஹாஷ்டாக் பதிவு செய்து தோனியின் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி  வருகின்றனர். இந்த 6 ஹாஷ்டாக்_கும் இந்தியளவில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.