திறந்துடுச்சு….. ”ஜம்முவில் 190 பள்ளிகள் திறப்பு”….. இயல்பு நிலையில் ஸ்ரீநகர் …!!

ஜம்முவில் இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிக் கொண்டு இருக்கும் நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு சட்டப்பிரிவை இரத்து செய்த மத்திய அரசு ஜம்முவை இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரித்தது.இதையடுத்து ஜம்முவில் இணைய சேவை துண்டிப்பு முன்னாள் முதல்வர்கள் வீட்டு சிறையில் அடைப்பு என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஏதேனும் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொண்டது. இதோடு இல்லாமல் ஆகஸ்ட் 15-தை ஜம்மு மற்றும் லடாக் பகுதியில் முதல் சுதந்திர தினமாக சிறப்பாக கொண்டாடியது. இதையடுத்து ஜம்முவில் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடுகள் தளர்க்கப்படு வருகின்றது. சில பகுதிகளில் இணைய சேவையும் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இன்று பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஜம்முவில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதால் இன்று 190 தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.இது குறித்து ஸ்ரீநகரில் செய்தியாளர்களை சந்தித்த  ஜம்மு காஷ்மீர் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ரோஹித் கன்சால் கூறுகையில் , ஸ்ரீநகர்ரில் மட்டும் 190 பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் , கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்தி  இணையம் மற்றும் தொலைபேசி சேவை மூலமாக வழங்கப்படும் என்றும் , ஜம்மு முழுவதும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என்றும் அவர்தெரிவித்தார்.