கர்பிணிப்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்…. காப்பாற்ற முடியாத காதலன்… பிறகு நேர்ந்த துயரம்..!!

ராஜஸ்தானில் கர்பிணிப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா  மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்ததால் அப்பெண்பெண் 2 மாத கர்ப்பம் ஆனார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 13- ஆம் தேதி அன்று இரவு பன்ஸ்வாராவில் இருந்து தனது கிராமத்திற்கு இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நடுவழியில் அவர்களை வழிமறித்த சுனில், விகாஸ், ஜீதேந்திரா ஆகியோர் தாங்கள் வைத்திருந்த வால் மற்றும் இரும்பு கம்பியால் காதலனை சரமாரியாக தாக்கி விட்டு அந்த பெண்ணை மறைவான இடத்துக்கு தூக்கிச் சென்றனர்.

Related image

பின்னர் மேலும் போன்செய்து விஜய், பப்பு  ஆகியோரையும் அழைத்தனர். மொத்தம் ஐந்து பேர் சேர்ந்து பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் அப்பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதில் அவரது கர்ப்பம் கலைந்தது. தனது காதலியை காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே என்ற ஏக்கத்தில் அந்த இளைஞர் அங்குள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஆனால் தன்னை ஒரு கும்பல் தாக்கியதையும் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி எதையுமே அவர் வெளியில் மூச்சி விடாமல் இருந்துள்ளார்.

Image result for 5 Arrested for Raping 20-year-old Woman After Thrashing Her ... after thrashing her boyfriend in Rajasthan's Banswara district

இந்நிலையில் இளைஞர் தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் ஐந்து பேரில் ஒருவரான ஜிதேந்திரா என்பவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் நடந்த விசயங்கள் அனைத்தும் தெரிந்தது. அதன் பிறகு தான் அந்த பெண் நடந்ததை போலீசாரிடம் விளக்கமாகச் சொன்னார். இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதற்குப் பிறகுதான் இந்த சம்பவம் வெளியே தெரிந்துள்ளது. கர்ப்பிணி பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை மட்டும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *