19 பயங்கரவாதிகள்.. “அடுத்தடுத்து குண்டு வெடிப்பு” முன்னாள் ராணுவ வீரர் கைது..!!

தமிழகம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் என்று போலியாக போன் செய்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று ஓசூரில் இருந்து பேசிய மர்ம ஆசாமி ஒருவர்  தென்னக ரெயில்கள் , ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, தெலுங்கானா, மராட்டியம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முக்கியமான நகரங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிக்கும் என்றும், இராமநாதபுர மாவட்டத்தில் 19 பயங்கரவாதிகள் நுழைந்துள்ளார்கள் என்று அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூரு போலீசார் தமிழ்நாடு உள்ளிட்டு எச்சரிக்கை விடுத்த  மாநிலங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் குண்டு வெடிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதோடு  முக்கிய நகரங்களில் அதிதீவிர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த தகவல் குறித்து விசாரணையை முடுக்கிய போலீசார் இது ஒரு ஏமாற்று அழைப்பு என்று கண்டு பிடித்தனர் மேலும்  இந்த தாக்கவலை தெரிவித்தவர் சுந்தர் மூர்த்தி என்று கண்டுபிடித்த பெங்களூரு போலீஸார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றது. இவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.