18 முதல் 59 வயதுடையோருக்கு இலவசம்…. டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு…. உடனே போங்க….!!!!

டெல்லியில் 18 வயது முதல் 59 வயதுடையவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை டோஸை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. தலைநகரில் கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லியில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 18 வயது முதல் 59 வயதுடையவர்கள் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இதற்காக கோவின் இணையத்தளத்தின் தேவையான மாற்றங்கள் அனைத்தும் செய்யப்பட்டு உள்ளதாகவும் இணையதளம் மூலமாக அல்லது நேரடியாக பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனவே மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.