உக்ரைன் நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து…. 17 பேர் பரிதாப பலி…!!

உக்ரைன் நாட்டில் செயல்பட்டு வந்த சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கத்தில் உள்ள லுகான்ஸ்க் நகரின் யுரிவ்கா பகுதியில்  நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இங்கு தொழிலாளர்கள் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது.

Image result for உக்ரைன் நிலக்கரி சுரங்கம்இந்த வெடி விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.