16 வயதில் “இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை”…. கலக்கும் இந்திய இளம் செஸ் வீரர்…!!!!!!

இந்திய ஆயில் நிறுவனத்தில் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்றுள்ள  செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி உள்ளது. மொத்தம் ஒன்பது தொடர்களாக நடைபெற்ற இந்த போட்டியில் சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தாவும் பங்கேற்றுள்ளார். இதில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காலிறுதி சுற்றில் பிரக்ஞானந்தா 2.5 -1.5 என்ற கணக்கில் சீனாவில் வெய்யி என்பவரை வீழ்த்தியிருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து அரையிறுதி சுற்றில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை எதிர் கொண்டிருக்கின்றார். மேலும் இந்த சுற்றில் 2-2 என்ற கணக்கில் இருவரும் சமநிலையில் இருந்துள்ள நிலையில் வெற்றியை தீர்மானிப்பதற்காக பிளே ஆஃப் ஆட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து டை பிரேக்கரில் 1.5 -0.5 என்ற கணக்கில் அனீஸ் கிரியை வீழ்த்தி பிரக்ஞானந்தா இறுதிப் போட்டி சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றார். அதே சமயம் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதிய சீனா வீரர் திங் லிரன் வெற்றி பெற்றுள்ளார்.

இதனையடுத்து  பிரக்ஞானந்தா இரண்டாவது இடத்தை பெற்றிருக்கின்றார். இந்த நிலையில் உலகின் முன்னணி செஸ் வீரர்களை வீழ்த்திசெஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரில் இரண்டாவது இடம் பிடித்த இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு  இந்திய ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. மேலும் தற்போது 16 வயதாகும் பிரக்ஞானந்தா பணிக் கால அடிப்படையில் தனது 18 வயதில் பணியில் சேர்ந்து கொள்வார்  எனவும் இந்திய ஆயில் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *