தமிழக முதலமைச்சர் இன்று கரூர் வருகை…!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  தேர்தல் பிரசாரத்துக்காக  கரூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில்  இன்று மாலை  வருகிறார்.

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில்நாடாளுமன்ற  தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடையடுத்து தமிழகத்தில் வருகின்ற 18_ ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால் அரசியல் கட்சித்தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து  தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன.

Image result for எடப்பாடி பிரச்சாரம்

இந்நிலையில்  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய  கரூருக்கு இன்று வருகை தருகிறார். பின்னர்  6:30 மணிக்கு தொடங்குகிற பிரச்சாரம் இரவு 9:30 மணியளவில் நிறைவுபெறுகிறது. இதில் கரூர்   அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரைக்கு ஆதரவளித்து  கரூர் பஸ் நிலையம், அரவக்குறிச்சி கடைவீதி, ரவுண்டானா ஆகிய பகுதிகளில் தன் வாகனத்தில் நின்று கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  வாக்கு சேகரிக்கிறார்.பின்பு பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி   அ.தி.மு.க  வேட்பாளர் என்.ஆர்.சிவபதியை ஆதரித்து குளித்தலை பஸ்நிலையம், கிருஷ்ணராயபுரம் சித்தலவாய் பஸ் நிலையம் முன்பு   பிரசாரம் செய்கிறார்.முதல்-அமைச்சர் வருகை தர இருப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.