பாலியல் வன்கொடுமை… பத்தாண்டு சிறை.. மகளிர் கோர்ட் அதிரடி உத்தரவு…

மாணவியை பாலியல் வன்கொடுமை  செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

 தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருக்கும் பில்பருத்தி பகுதியை சேர்ந்தவர் மருதப்பாண்டி.   27 வயதான இவர்  கடந்த  2014-ம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியை பாலியல் வன்ன்கொடுமை செய்ததற்காக அம்மாவட்ட போலீசாரால் கைது செய்ப்பட்டார் .  மேலும் இவ்வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது.இதில்  அரசு தரப்பில் வக்கீல் ஆஜராகி வாதாடினார்.

இந்நிலையில்  இவ்வழக்கு இறுதிக்கட்ட விசாரணை முடிந்த நிலையில்   மருதுபாண்டிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மட்டுமல்லாமல் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட மகளிர் நீதிபதி ஜீவானந்தம் தீர்ப்பு அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிக்கு, மருதுபாண்டி ஒரே மாதத்திற்குள் ரூ.1 லட்சம் தொகையை வழங்கவும் நீதிபதியால்   உத்தரவிடப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகளை வழங்க மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி  பரிந்துரைசெய்தார்.