“ரூ 1,56,61,560 சாலையில் வீச்சு” சென்னை கோட்டூர்புரத்தில் பரபரப்பு…!!

சென்னை கோட்டூர்புரத்தில் பண பைகளை வீசி சென்றது மர்ம நபர் யார் என்று வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை கோட்டூர்புரம் அருகேயுள்ள வரதாபுரம் ஏரிக்கரை லாக் தெருவில் சதேகப்படும் வகையில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் சுற்றி வருவதாக சொல்லப்பட்டதைஎடுத்து போலீசார் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நேற்றிரவு சுமார் 2.30 மணியளவில் சந்தேகப்படும் அந்த நபர் போலீஸ் கண்களில் சிக்கியதால் அவரின் வாகனத்தை நிறுத்த போலீசார் முயன்றனர். ஆனால் சம்மந்தப்பட்ட அந்த நபர் போலீஸ் நிறுத்தியும் வாகனத்தை நிறுத்தாமல்  சென்றுள்ளார்.

இந்நிலையில் போலீஸ் அந்த நபரை விரட்டி சென்ற போது போலீசில் இருந்து தப்பிக்க அந்த நபர் தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பைகளை வீசியெறிந்ததாகக் கூறப்படுகிறது. இதை போலீஸ் துரத்துவதை நிறுத்திவிட்டு அந்த பையை பார்த்த போது அதில் பணம் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த மர்ம நபர் தலைமறைவானதையடுத்து அந்த பைகளை  காவல் நிலையத்திற்கு கொண்டு வந்த போலீசார் அதில் ஒரு கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 560 ரூபாய்  இருந்ததாக தெரிவித்தனர். பனைத்தை வீசிய நபர் யார் என்பது குறித்து  போலீசார் தேடிவருகின்றனர்.