154 நாடுகள்…. 1,98,108 பேர் பாதிப்பு…. 7,948 மரணம்….. நாளுக்கு நாள் நடுங்க செய்யும் கொரோனா …!!

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்ட ஒரு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது.

சீனாவில் உதயமான கொரோனா வைரஸ் 154 நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 3241 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தவிர்த்த மற்ற நாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ,713 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலி நாட்டில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 2503 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6000த்தை தாண்டியுள்ளது. பிரிட்டன், சுவிட்சர்லாந்து , நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகின்றது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள ஜப்பான் நாட்டில் 882 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆசிய நாடுகளான மலேசியாவில் 673 பேரும் , சிங்கப்பூரில் 266 பேரும் , தாய்லாந்தில் 177 பேரும், இந்தோனேசியாவில் 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்டை நாடான பாகிஸ்தானில் 237 பேரும் , இலங்கையில் 44 பேரும் வங்கதேசத்தில் 10 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.