
அமெரிக்க நாட்டில் ஜெனிஃபர் வில்சன் என்ற 48 வயது பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வந்தார். இந்த சிறுவனுக்கு 10 வயது ஆகிறது. இதில் ஜெனிபர் 154 கிலோ இருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய மகன் சொல்பேச்சு கேட்காததால் கோபத்தில் ஜெனிபர் சிறுவன் மீது அமர்ந்தார். கிட்டத்தட்ட 5 நிமிடம் மட்டுமே ஜெனிபர் சிறுவன் மீது அமர்ந்து நிலையில் மூச்சு விட முடியாமல் சிறுவன் இறந்துவிட்டான்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ஜெனிபரை கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது ஜெனிஃபருக்கு 6 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் கோழி மிதித்து குஞ்சு சாகாது என்பது பழமொழி. ஆனால் அம்மா மகன் மீது அமர்ந்ததால் சிறுவன் இறந்தது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.