“8 வழி சாலை” மேல்முறையீடு ? ஜான் பாண்டியன்.

வளர்ச்சியை முன்னோக்கியது.8 வழிச்சாலை திட்டம் ஆகவே தமிழக அரசு சார்பில் ஆளும்  ஆ .தி .மூ க சார்பில் மேல்முறையீடு செய்வதில் எந்தவித தவறுமில்லை என்று ஜான் பாண்டிணன் கூறியுள்ளார்.

கரூரில் ஜான்பாண்டியன் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் கூறியதாவது:-

தேவேந்திர குல வேளாளர்களை  பற்றி இதுவரை பேசிடாத தி.மு.க. தேர்தல் சமயத்தில் பேசுவது தேர்தல் ஆதாயத்திற்காக தான்.இது முரணானது . தி.மு.க விற்கு தோல்வி பயம் வந்து விட்டது. தேர்தல் சமயத்தில் ஆண்டுக்கு ரூ.72000. ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவார் என்பதும், விவசாய கடன்களை ரத்து செய்வ என்பதும் கேலிக்கூத்தாக உள்ளது.

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு வெளியிட்டுள்ள  வட்டியில்லா கடன் முதலிய திட்டங்கள் ஏற்று கொள்ளும்படியானதாக இருக்கிறது.என்றும் ஒருசில இடங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக தாக்குதல் நடக்கலாம் .ஆனால்  நாடு முழுவதும் நடப்பதாக கூற முடியாது எனவும் . 8 வழிச்சாலை திட்டம் வளர்ச்சியை எதிர்நோக்கியது  ஆகவே

ஆ .தி .மு .க ..சார்பில் மேல்முறையீடு செய்வதில் தவறில்லை.இவ்வாறு ஜான்பாண்டியன் கூறினார்.