15,000 அடி உயரத்தில்…. தேசிய கொடியை பறக்கவிட்ட வீரர்கள்…. வெளியான வீடியோ….!!!!

நாடு முழுவதும் 73வது குடியரசு தின விழாவானது கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூவர்ண தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டின் வடக்கு எல்லைப் பகுதியான லாடக் பனிச் சிகரத்தில் சுமார் 15,000 அடி உயரத்தில், மைனஸ் 40 டிகிரி உறைபனியில் இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தியுள்ளனர்.

மேலும் தேசிய கொடியை ஏற்றி பாரத் மாதா கி ஜெய் என முழக்கமிட்டுள்ளனர். இந்திய பாதுகாப்பு படையில் முக்கிய பிரிவான இந்தோ திபெத் எல்லைப் படை லடாக்கின் காரகோரம் எல்லையிலிருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் ஜேசப் லா எல்லைப் பகுதி வரை சுமார் 3,500 கி.மீ. பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறது. இந்தியா-சீனா எல்லைகளை பாதுகாப்பதற்காகவே இவர்கள் மலைச்சிகர போர் பாதுகாப்பு முறையில் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *