150 கோடி மக்களை சந்தோஷப்படுத்தும் ஒரே துறைக்கு அரசு உதவுவது இல்லை…. வேதனை தெரிவித்த பிரபல இயக்குனர்….!!!!!

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் கே.வி.தனசேகரன் இயக்கத்தில் நட்டி நடராஜ் நடித்துள்ள திரைப்படம் குருமூர்த்தி. இவருக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா நடித்திருக்கிறார். மேலும் ராம்கி, சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவி மரியா, ரேகா, சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரண்ட்ஸ் டாக்கிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சத்தியதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். குருமூர்த்தி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் ஆர்.கே. செல்வமணி, ராஜாவாக இருந்தாலும் கூட அவருக்கு சின்ன சின்ன ஆசை இருக்கும். அப்படி இந்தியாவில் முதல் பந்து கேமராமேன்களில் ஒருவராக இருக்கும் நட்டி, நடிப்பின் மீதான காதலால் ஒரு நடிகராக மாறி ஒரு துணை நடிகரைப் போல் எளிமையாக இந்த இடத்தில் அமர்ந்து இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் அவர் கதைகளை தேர்வு செய்யும் விதமும் ஒவ்வொரு படத்திலும் ஆச்சரியப்பட வைக்கிறது. அதன்படி அவர் தேர்வு செய்ததாலேயே இந்த படம் வித்தியாசமான படமாக இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியும். சினிமா துறையை பொறுத்த வரை முதலீடு செய்த பணத்திற்கு லாபம் கூட கிடைக்க வேண்டாம். ஆனால் முதலீடு செய்த பணமாக திரும்ப வரவேண்டும் அல்லவா? அரசு இந்த துறையை தொழில்துறையாக அறிவித்தது. ஆனால் அதற்கான எந்த உதவிகளும் சினிமாத்துறைக்கு வழங்கப்படவில்லை. மேலும் இந்த துறை 150 கோடி மக்களை சந்தோஷப்படுத்தும் ஒரே துறை. இந்த துறையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் அவர்கள் வாழ்வாதாரத்திற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. இதில் நிச்சயம் மாற்றம் வரவேண்டும். அதுவரை தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டு இருப்பது எங்கள் கடமை என்று அவர் தெரிவித்துள்ளார்.