15 ஆண்டு சினிமா வாழ்க்கை….. தமன்னா ஓப்பன் டாக்…!!!

தமிழ்,தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் தமன்னா தனது 15 ஆண்டுகால சினிமா வாழ்க்கை குறித்து ஓப்பனாக பேசியுள்ளார்.

 

எந்த வேலை செய்யும் போதும் உற்சாகத்தோடும் முழுமனத்தொடும் செய்வேன். “திரையில் மட்டும்மல்ல படப் பிடிப்பு அரங்கிலும் எப்போதும் உஷாராக இருப்பேன். இதுதான் எனது பலம். செய்கிற தொழில் எதுவாக இருந்தாலும் பலன் பற்றி யோசிக்காமல் இஷ்டத்தோடு செய்ய வேண்டும். அப்போதுதான் இரவு வேலை செய்யும்போதும் சோர்வு இல்லாமல் இருக்கும்.

Image result for தமன்னா

 

பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துவிட்டு சினிமாதுறையில் கால் பதித்தவள் நான். எனது 15 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் நிறைய அனுபவங்களை கற்றுக்கொண்டேன். இப்போது முன்னணி நடிகையாக வலம்வருகிறேன். இந்நிலையில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளேன் அதை விமர்சிக்கிறார்கள். ஆனால் வட இந்தியாவில் பெரிய நடிகைகள் பாடலுக்கு ஆடுகிறார்கள். தென்னிந்தியாவில் மட்டும் தான் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியதும் பட வாய்ப்புகல் குறைந்துவிட்டது அதனால் தான் ஆடுகிறார்கள் என்று பேசுகின்றனர். எனக்கு நடனம் தெரியும். அதனால் நான் குத்துப்பாடலுக்கு நடனம் ஆடுகிறேன் என்று கூறியுள்ளார்.