மதுரை கோச்சடையைச் சேர்ந்தவர் கொத்தனார் சங்கர் (39). திருமணமான இவர், வேலை தொடர்பாக தஞ்சை அருகே பூதலூருக்கு வந்தபோது 9ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. கொரோனா காரணமாக அந்த மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அந்த சிறுமையை காதலிப்பதாகக் கூறி சங்கர் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி சுந்தர்ராஜன், சங்கருக்கு 25 ஆண்டுகள் சிறை, ரூ.15 ஆயிரம் அபராதம், அதனை கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.