மராட்டிய மாநிலம் தானே பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் உறவுக்காரர்களான 20 வயது வாலிபர் மற்றும் அவரின் தந்தை ஆகியோர் அதே பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் கடந்து 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.

இதைத் தெரிந்து கொண்ட தந்தையும், மகனும் கருக்கலைப்பு செய்வதற்காக சிறுமிக்கு மாத்திரைகள் வாங்கிக் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது சிறுமியின் தாயாருக்கு தெரிய வந்த நிலையில் அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் தந்தை மகனை தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.