15 அடி பள்ளத்தில் விழுந்த முதியவர்…. குடிபோதையில் இருந்ததால் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பாலத்தில் இருந்து தவறி விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜா கவுண்டனூர் கிராமத்தில் வரதராஜன்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களாக வரதராஜன் நாரைக்கிணறு பிரிவு ரோடு பகுதியில் இருக்கும் தம்பி முருகேசன்(60) என்பவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடிபோதையில் நாரைக்கிணறு பிரிவு சாலையில் இருக்கும் சிறிய பாலத்தின் மீது அமர்ந்திருந்த வரதராஜன் திடீரென நிலைதடுமாறி 15 அடி பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *