தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டதில் , கடந்த 24 மணி நேரத்தில் , அரியலூர் திருவடைமருதூர் 15 சென்டி மீட்டர் மழையும் , கும்பகோணத்தில் 12 சென்டிமீட்டர் மழையும் , அரூரில் 11 சென்டிமீட்டர் மழையும் , திருப்பத்தூர் , நன்னிலத்தில் 7 சென்டிமீட்டர் மழையும் , விருதாச்சலம் , ஆரணி , ஆத்தூர் , முசுறியில் 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. வடதமிழகத்தில் காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகம் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழையும் , கடலூர், விழுப்புரம், தி.மலை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சை, சேலம் ஆகிய 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.