தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு …!!

தமிழகத்தில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 2.50 லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,51,738ஆக அதிகரித்தது. 7,010 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 1,90,966பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 1,074 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,00,877 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 12,436 சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 75.86 % குணமடைந்துள்ளனர்.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 99 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு 4,034 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 58,243பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 26,18,512 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 57 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 56,738ஆக அதிகரித்துள்ளது. தமிழக பாதிப்பு 2.50லட்சத்தையும், சென்னை 1 லட்சத்தையும் தாண்டியுள்ளது அரசை நடுங்க வைத்துள்ளது. தமிழக்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு :

சென்னை-1074

காஞ்சிபுரம்-368

தேனி-327

செங்கல்பட்டு-314

திருவள்ளூர்-305

விருதுநகர்-286

தூத்துக்குடி-243

தி.மலை -242

கோவை – 238

குமரி -198

வேலூர் -197

கடலூர்- 182

நெல்லை-181

தென்காசி- 178

தஞ்சை-167

மதுரை – 166

விழுப்புரம் – 158

திருச்சி-136

ராணிப்பேட்டை-116

புதுக்கோட்டை-91

திண்டுக்கல்-81

கிருஷ்ணகிரி-74

சிவகங்கை- 61

க.குறிச்சி- 60

சேலம்- 51

திருவாரூர்-45

ராமநாதபுரம்-37

நாகை-37

நீலகிரி -36

திருப்பூர்-36

கரூர்-36

நாமக்கல்-32

அரியலூர்- 32

திருப்பத்தூர்- 22

பெரம்பலூர் -20

தர்மபுரி -9

ஈரோடு – 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *