144…. கால் உடைப்பவர்களுக்கு….. சூடுபவர்களுக்கு…. ரூ5,100 பரிசு….. MLA சர்ச்சை பேச்சு….!!

144 மதிக்காமல் சுற்றித்திரிபவர்கள்குறித்து உபி MLA கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை  ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். இதனை நாடு முழுவதும் மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். இருப்பினும்,

ஒரு சில தேவையில்லாத விஷயங்களுக்காகவும் அரசின் அறிவுரையை மதிக்காமல் ஆணவத்தில் சிலர் வெளியே சுற்றித் திரிகின்றனர். அவர்களுக்கும் நூதன முறையில் பல்வேறு தண்டனைகள் வழங்கப்பட்டு அறிவுரை  வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச பாஜக எம்எல்ஏ நந்த் கிஷோர் என்பவர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், அரசின் பேச்சைக் கேட்காமல் வெளியில் சுற்றித் திரிவோரின், கால்களை உடைப்பவர்களுக்கும், சுடுபவர்களுக்கும் ரூபாய் 5,100 பரிசு தருகிறேன் என்று தெரிவித்ததோடு அரசு பேச்சை மதிக்காமல் திரிபவர்கள் தீவிரவாதிகள் என்றும் பதிவிட்டார். இவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *