வார்னர் அதிரடி அரை சதம் 85 (53)……. சன்ரைசர்ஸ் 16 ஓவர் முடிவில் 144/2……!!

வார்னர் அதிரடியால் சன்ரைசர்ஸ் அணி 16 ஓவர் முடிவில் 144/2 ரன்கள் எடுத்து தற்போது விளையாடி வருகிறது. 

இன்றைய ஐ.பிஎல் போட்டி  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றது . இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து  சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும்,பேர்ஸ்டோவும் களமிறங்கி சிறப்பாக விளையாடி அதிரடி தொடக்கத்துடன் விளையாடி வருகின்றனர். வார்னர் அரை சதம் கடந்து விளையாடி வருகிறார். மறுபுறம் பேர்ஸ்டோ நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபுறம் வார்னர் ருத்ர தாண்டவம் ஆடினார். இதையடுத்து  பேர்ஸ்டோ 39 (35) ரன்களில் பியூஸ் சாவ்லா பந்து வீச்சில் கிளீன் போல்டனார். இதையடுத்து விஜய் சங்கர் களமிறங்கினார். வார்னர் 85 (53),  ரன்களில் ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் 12 (7),  யூசுப் பதன் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.  சன்ரைசர்ஸ் அணி தற்போது  144/2 ரன்களுடன் விளையாடி வருகிறது.