“அசாம் மாநிலத்தில் கனமழை” 141 வன விலங்குகள் உயிரிழப்பு..!!

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தீவிர கனமழையால் காசிரங்கா தேசிய வனவிலங்கு பூங்காவில் இதுவரை 141 வன விலங்குகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. 

அசாம் மாநிலத்தில்  தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த தீவிர மழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அம்மாநிலத்தில் இருக்கும் காசிரங்கா வனவிலங்கு பூங்காவில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் வன விலங்குகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன. மேலும் வெள்ளத்தில் சிக்கி இதுவரையில் 141 வனவிலங்குகள் உயிரிழந்துள்ளது.

Image result for 141 wildlife deaths in Assam

காசிரங்கா பகுதியில் காணப்படும் அரியவகை காண்டாமிருகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது இதுவரை இந்த வெள்ளத்தால் 12 காண்டாமிருகம்,  9 சாம்பார் மான்கள் 101 பன்றி மான்கள், ஒரு யானை உள்ளிட்ட 141 வனவிலங்குகள் வெள்ளத்தின் பாதிப்பினால் உயிரிழந்துள்ளன. காசிரங்கா பூங்காவின் 90 சதவீத பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது