அமெரிக்காவில் அதிர்ச்சி…. குடும்பத்தினர் 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்.!!

அமெரிக்காவில் 14 வயது சிறுவன் தனது குடும்பத்தினர் 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் அலபாமா அருகே இருக்கும் எலெக்ட்ரான் என்ற இடத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் தனது வீட்டில் இருந்த குடும்பத்தினர் 5 பேரை திடீரென சுட்டு கொன்றுவிட்டான். சுடப்பட்ட ஐந்து பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்த செயலை செய்து முடித்தபின் சிறுவன் தானாக போலீசாருக்கு தகவல் கொடுத்து தெரிவித்தான்.

Image result for Sheriff: 14-year-old killed his family, later confessed

இதையடுத்து போலீசார் அச்சிறுவனை  கைது செய்து விசாரணை நடத்தியதில் கொல்லப்பட்டது ஜான் சிஸ்க் (38),  மேரி சிஸ்க் (35)  சிறுவனுடைய தம்பி (6),  தங்கை (5)  தம்பி (6 மாதம்)  ஆகியோர் கொல்லப்பட்டது தெரியவந்தது. மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.14 வயது சிறுவன் தனது அம்மா,அப்பா, தம்பி, தங்கையை சுட்டுகொன்ற இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Image result for Sheriff: 14-year-old killed his family, later confessed

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் பெரும் சமூகமாக மாறி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த செயல் நடந்துள்ளது. இதனிடையே அமெரிக்காவில், தங்கள் கடைகளில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை  செய்து கொள்வதை நிறுத்த போவதாக வால்மார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.