கர்நாடகாவில் மேலும் 14 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்… சபாநாயகர் ரமேஷ் அதிரடி..!!

கர்நாடகாவை சேர்ந்த மேலும் 14 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் 

கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கூட்டணி அரசு தோல்வியடைந்து கவிழ்ந்தது.  இதையடுத்து குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்த பின், கர்நாடக பாஜக ஆட்சியமைக்க உரிமை கோர ஆளுநர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தற்போது கர்நாடக முதல்வராக இருக்கும் எடியூரப்பா நாளை நடைபெறும் கர்நாடக சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார்.

Related image

இந்நிலையில் மேலும் 14 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி 11 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் 3 மஜத  எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே அதிருப்தி எம்எல்ஏக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்து  சபாநாயகர் உத்தரவிட்ட நிலையில்,  தற்போது மேலும் 14 பேரை சேர்த்து மொத்தம் 17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.