தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ப்ளோரா சைனி. இவர் பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கஜேந்திரா, குஸ்தி, சாரி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, திண்டுக்கல் சாரதி, நானே என்னுள் இல்லை, கனகவேல் காக்க, குசேலன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ப்ளோரா சைனி தன்னுடைய காதலனால் பட்ட துன்பத்தை பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, நான் 20 வயதில் சினிமாவில் நுழைந்த நிலையில் ஹிந்தியில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன்.
அதன் பிறகு ஒரு தயாரிப்பாளர் மீது காதலில் விழுந்த நிலையில் அவருடன் சேர்ந்து வாழ தொடங்கினேன். என்னுடைய காதலர் ஆரம்பத்தில் மிகவும் இனிமையானவராகவும், அன்பானவராகவும் இருந்தார். அவர் என் பெற்றோரிடம் இருந்து என்னை பிரித்து விட்டதால் நான் வீட்டை விட்டு வெளியேறினேன். நான் அவருடன் சென்ற ஒரு வாரத்தில் அவர் என்னை அடித்து துன்புறுத்தியதோடு பலவிதமாக அவமானப்படுத்தினார்.
14 மாதங்கள் என்னை சினிமாவில் நடிக்க விடாமல் சித்திரவதை செய்தார். இதனால் அந்த தயாரிப்பாளரிடமிருந்து நான் தப்பித்து ஓடி வந்து விட்டேன். இப்போது என் பெற்றோருடன் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram