14 அம்ச கோரிக்கைகள்…. காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்…. 40 பேர் கைது….!!

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினரின் சார்பில் பெரியகுளம் மூன்றாந்தலில் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தினந்தோறும் உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல், சிலிண்டரின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமை தாங்கியுள்ளார்.

இதனையடுத்து காங்கிரஸ் நகர தலைவர் சுப்பிரமணி, துணைத்தலைவர் சம்சுதீன், வட்டாரத் தலைவர் முகமது உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி உள்ளனர். இதனைதொடர்ந்து நிர்வாகிகள் ஊர்வலம் செல்ல முயன்றதால் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து ஊர்வலம் செல்ல முயன்றதால் காங்கிரஸ் கட்சியினர் 40 பேரை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *