22,602 ஏக்கர் பாசன வசதிக்கு 137 நாள் நீர் திறப்பு… முதல்வர் உத்தரவு..!!

மாயனூர் கதவணையிலிருந்து திருச்சி, தஞ்சை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் இருந்து புதிய கட்டளை வாய்க்காலில் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டதை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் கீதா மதகுகளிலிருந்து தண்ணீர் திறந்து விட்டார். இந்தநிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்று காவிரி நீருக்கு மலர்கள் நவதானியம் தூவி வரவேற்றனர்.

Image result for கரூர் மாயனூர் கதவனை

முதல் கட்டமாக வினாடிக்கு 100 கனஅடி வீதமும் போக போக வினாடிக்கு 400 கன அடி வீதம் வரை 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருச்சி தஞ்சை மாவட்டங்களில் 13,138 ஏக்கருக்கு நேரடியாகவும் 107 குளங்கள் மூலமாக 9,464 ஏக்கர்கள் பாசன வசதி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 134 கிலோமீட்டர் தூரம் உள்ள பாசன வாய்க்காலில் தேங்கும் நீரை தேவைக்கேற்ப விவசாயிகள் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.