130 ரூபாய் பாட்டில் 250 ஆ… கடத்தி வந்து விற்பனை… வசமாக சிக்கிய இளைஞர்கள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து மது பாட்டில்களையும் பரிமுதல் செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் மதுபாட்டில்களை கடத்தி வந்து சிலர் அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் காவல்துறையின்  மல்லசமுத்திரம் காளிப்பட்டியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படி 2 இளைஞர்கள் நிற்பதை கண்ட அவர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்(19), கார்த்திக்(19) என தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து 130 ரூபாய் மதிப்புள்ளமது பாட்டிலை 250 ரூபாய்க்கு விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது. மேலும் அந்த 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 50 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *