13 வயது சிறுமிக்கு…. 32 வயதுடையவருடன் திருமணம்… சித்தப்பா முடிவால் அதிரடி …!!

மதுரை அருகே 13 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி சிறுமியின் குடும்பத்தினர் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கும், கடலடியை சேர்ந்த 32 வயதான ரமேஷ் என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்து மதுரை மாவட்டம் கீழ செம்பட்டியல் திருமணத்திற்கான ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த திருமணம் குறித்து சிறுமியின் சித்தப்பா காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் சிந்துபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற திருமணத்தை தடுத்து நிறுத்தி சிறுமியின் பெற்றோர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் சித்தப்பா எடுத்த அதிரடி முடிவால் சிறுமிக்கு நடக்க இருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *