’13 மாணவர்கள் மரணத்திற்கு காரணம் திமுக கூட்டணி’… சட்டசபையில் ஆவேசமாக பேசிய முதல்வர்..!!

நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு திமுகதான் காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டசபையில் எதிர்கட்சி தலைவரான மு க ஸ்டாலின் நீட் தேர்வு பற்றி ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது இந்த தேர்வை யார் கொண்டு வந்தது என்பது குறித்து திமுக-அதிமுக இடையே காரசார விவாதம் ஏற்பட அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நீட் தேர்வுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் பா.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம் ஆஜராகி வாதாடினாரா? இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்த அவர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் நீட் தேர்வு காங்கிரஸ்- திமுக கூட்டணியால் கொண்டுவரப்பட்டது என்றும், ரத்து செய்யப்பட்ட இந்த தேர்வை மீண்டும் கொண்டு வந்து வரலாற்றுப் பிழை செய்தது திமுக என்றும் குற்றம் சாட்டினார். நீட் தேர்வை கொண்டுவந்து 13 மாணவர்களின் மரணத்திற்கு திமுக கூட்டணி தான் காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக பேசினார். அவரின் பேச்சால் ஸ்டாலின் தலைமையிலான திமுக தரப்பு அவையில் திணறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *