உத்திரப்பிரதேச மாநிலத்தில் இரயில் தடம் புரண்டு விபத்து….. காயமடைந்த 13 பேருக்கு சிகிச்சை…..!!

ஹவுரா – புது டெல்லி பூர்வா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கான்பூரில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில்  13 பேர் காயமடைந்துள்ளார்.

புது டெல்லியிலிருந்து ஹவுரா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூருக்கு அருகில் சென்ற போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நள்ளிரவு 12.50 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 13 பேர் காயமடைந்ததாகவும் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே உயரதிகாரி அமித் மால்வியா தெரிவித்தார்.

இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த  மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து  மீட்புப் பணிகளை தீவிர படுத்தி வருகின்றனர் .  இரயில் விபத்துக்குள்ளான இடத்தில்  மருத்துவக்குழுவும் நேரடியாக சென்று பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தனர். இந்த விபத்து காரணமாக அந்தவழியே செல்லும் 13 ரயில்களின் வழித்தடம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும் ,  1 ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.