“கிராமத்திற்குள் புகுந்த 13 காட்டு யானைகள் “அச்சத்தில் பொதுமக்கள் !!..

வேப்பனப்பள்ளி அருகே காட்டு யானைகள் கிராமத்திற்குள் புகுந்ததால் கிராமமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பச்சை மலை பகுதியில் 13 காட்டு யானைகள் தனது குட்டிகளுடன் சுற்றித்திரிகின்றன .மேலும் யானைகள் ஆந்திர மாநிலத்தின் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளிலும் வேப்பனப்பள்ளி பகுதிகளிலும் அதிகமாக வலம் வருகின்றன மேலும் அவ்வபோது வனப் பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் நேற்றைய தினம் காலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த 13 காட்டு யானைகள் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கிராமத்தில் புகுந்து மீண்டும் விவசாய நிலங்களை சேதப்படுத்தினர் இதன் அட்டகாசம் தாங்க முடியாமல் அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்  அதன் பின்   வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர் அதன்பின் மீண்டும் யானைகள் வனப்பகுதிக்குள் சென்று விட்டன மீண்டும் எப்பொழுது வேண்டுமானாலும் யானைகள் ஊருக்குள் புகுந்து விடும் என்ற அச்சத்தில் அப்பகுதி கிராம மக்கள் உள்ளனர் .