லாவோஸ் நாட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 13 பேர் பலி… 31 பேர் காயம்..!!

லாவோஸ்  நாட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சீனாவை சேர்ந்த 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

லாவோஸ்  நாட்டின் தலைநகரான வியன்டியன் நகருக்கும், லுவாங் பிரபாங் நகருக்கும் இடையே  சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்றில் சீனாவை சேர்ந்த 44 பேர் பயணம் செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

Image result for Thousands die after bus crashes in Laos

இதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பேருந்தில்  சீன சுற்றுலா உதவியாளர் ஒருவரும்,  லாவோஸ் நாட்டை சேர்ந்த ஓட்டுனர் மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஆகியோரும் பயணித்தனர்.

Image result for 13 die after bus crashes in Laos

இந்த விபத்துக்கு பேருந்தின் பிரேக் பழுதானதே காரணம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தை அறிந்த  லாவோஸ் நாட்டிலுள்ள சீன தூதரக ஊழியர்கள் மற்றும் லுவாங் பிரபாங்கில் உள்ள சீன தூதர் விபத்து நடந்த பகுதிக்கு சென்று மேற்பார்வை செய்தனர்.