தமிழகத்தில் வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் யூனிட் ஒன்றுக்கு 13 முதல் 21 காசுகள் வரை மின்கட்டணம் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள குறிப்பில், தமிழ்நாட்டில் வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படாது. வீடுகளுக்கு 100 யூனிட் இலவசம் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்த போதும் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.