“13 வருடங்களாக நடிகை கீர்த்தி சுரேஷ் இவரைத்தான் காதலிக்கிறாராம்”… யார் தெரியுமா….? உண்மையை போட்டுடைத்த பிரபலம்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றார். இவர் நடிப்பில் கடைசியாக சாணி காயிதம், அண்ணாத்த போன்ற திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது. இவர் தற்போது மாமன்னன், சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, தசரா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் கடந்த 13 வருடங்களாக தன்னுடன் பள்ளியில் படித்த ஒருவரை காதலித்து வருவதாக பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். மேலும் கீர்த்தியின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் இன்னும் 4 வருடங்கள் கழித்து கீர்த்திக்கும் அவருடைய பள்ளிப்பருவ நண்பருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கீர்த்தி காதலிக்கும் நபருக்கு கேரளாவில் பல ரிசார்ட்டுகள் இருக்கிறதாம்.

Leave a Reply