சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில்,  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

அதோடு விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போன்ற  மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதுதவிர நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் வருகிற 23-ம் தேதி வரை பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.