பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதாமல் விடுபட்ட மாணவர்கள் 50,000 பேர் மீண்டும் தேர்வு எழுத பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதால் அவர்களை மீண்டும் தேர்வு எழுத வைப்பது பற்றி தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
மார்ச் 24 மற்றும் ஏப்ரல் 10ம் தேதிகளில் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தேர்வில் பங்கேற்காத மாணவர்களை சந்தித்து துணை தேர்வில் கலந்து கொள்ள அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நீண்ட நாள் பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து அவர்களை கூட்டத்தில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை பள்ளி கல்வித்துறையின் மாநில திட்ட இயக்குனர் அனுப்பியுள்ளார்.