மருந்துகளை தன்னிச்சையான விலையில் விற்பனை செய்வதை தடுக்க NPPA நடவடிக்கை எடுத்துள்ளது. அதில் பல ஆண்டிபயாட்டிக் மற்றும் வைரஸ் தடுப்பு மருந்துகள் அடங்கும். நிறுவனம் நிர்ணயித்தபடி சிட்டிசன் மாத்திரை 1.68 பைசாவுக்கும், பாராசிட்டமல் 2.76 ரூபாய்க்கும், இபுப்ரோபென் 400 மில்லி கிராம் மருந்து விலை 1.07 ரூபாய்க்கும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை தவிர புற்றுநோய், சர்க்கரை மற்றும் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட 128 மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விற்பனை விட குறைக்கப்பட்டுள்ளது.