12 வருட உழைப்பு….. பறிபோன வேலை….. விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை….!!

திருவள்ளூர் அருகே வேலை பறிபோன விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியை அடுத்த கிரிஜா நகர் பூங்காவனத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் கணேஷ். இவர் அதே பகுதியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலை ஒன்றில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பாக அவரை பணியில் இருந்து தொழிற்சாலை நிறுத்தி விட்டதாக தெரிய வருகிறது.

இதனால் மனமுடைந்த அவர் தனது குடும்பத்தினரிடம் கூறி அழுதுள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆறுதல் கூறியும் சமாதானப்படுத்தி ஆறுதல் அடைந்த அவர் விரக்தியில் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *