நேற்று காலையில் இலங்கையிலிருந்து மண்டபம் பகுதிகளில் தங்கம் கடத்துவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறைக்கு ஒரு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அவர்கள் நேற்று காலையில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து படகில் இந்திய கடலோர காவல் படையினரும், மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது ஒரு பைவர் படகு சந்தேகத்துக்கு இடமாக நின்றது. அந்த படகை விரட்டி சென்ற போது அந்த படகில் இருந்த மூன்று பேர் ஒரு பார்சலை தூக்கி கடலில் வீசியுள்ளார்கள்.
சுற்றி வளைத்த கடலோர காவல் படையினர், அவர்களை மடக்கி பிடித்து மண்டபம் முகாமுக்கு அழைத்து வந்து விசாரணை செய்தார்கள். விசாரணையில் நாங்கள் தூக்கி எறிந்தது தங்கம் தான். எங்களை கைது பண்ணிடுவீர்கள் என்று அச்சத்தினால் தூக்கிப் போட்டதாக சொன்னனர். இதையடுத்து நேற்று காலையில் 9:00 மணி முதல் மாலை 6 மணி வரைக்கும் இந்திய கடலோரக் காவல் படை, மத்திய புலனாய்வு வருவாய் புலனாய்வு துறையினர் நடுக்கடலில் சோதனை செய்தார்கள். ஆனால் எந்தவிதத் தங்கமும் கிடைக்கவில்லை.
கைது செய்யப்பட்ட மூன்று பேரை விசாரணைக்கும்போது அவர்கள், எங்களை கொண்டு போய் அந்த இடத்துல் காமிச்சா நாங்க தங்கத்தை எடுத்து கொடுத்துடுவோம் அப்படின்னு சொல்லி இருந்தார்கள். அதனால மூன்று பேரையும் தூத்துக்குடியில் இருந்து கடலில் முத்து சேகரிக்கின்ற தொழிலாளர்கள் உட்பட ஒரு 13 பேர் கொண்ட குழு இரண்டு விரைவு படகுகளில் அந்த கடல் பகுதியில் சோதனை செய்தார்கள். முதற்கட்டமாக நேற்று தூக்கி எறியப்பட்ட தங்கத்தை எடுத்து இருக்கிறார்கள். 7.50 கோடி மதிப்புள்ள 12 கிலோ கிடைத்துள்ளதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.