12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!!

சென்னை தவிர மீதமுள்ள  37 மாவட்டங்களில் 25 மாவட்டங்களுக்கு ஏற்கனவே கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து விடுபட்ட 12 மாவட்டங்களுக்கு தற்போது கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, அரியலூர் – சிறுகுறு தொழில்துறை செயலர் வி அருண் ராய், கள்ளக்குறிச்சி – நெடுஞ்சாலைத்துறை செயலர் பிரதீப் யாதவ், கோயம்புத்தூர் – டிட்கோ மேலான் இயக்குனர் ஜெயஸ்ரீ முரளிதரன், காஞ்சிபுரம் – ஊரக வளர்ச்சி செயலர் பி செந்தில் குமார், நாமக்கல் – தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் ஜெய். குமரகுருபரன், நாகப்பட்டினம் – எரிசக்தி துறை செயலர் ரமேஷ் மீனா, புதுக்கோட்டை – நில நிர்வாக ஆணையர் எஸ். நாகராஜன் போன்றோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து ராமநாதபுரம் – மனித வள மேலாண்மை துறை செயலர் கே நந்தகுமார், சேலம் – தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குனர் பி ஷங்கர், ராணிப்பேட்டை – தேசிய சுகாதார இயக்குனர் ஷில்பா  பிரபாகர் சதீஷ், திருப்பத்தூர் – சுகாதாரத்துறை செயலாளர் சுகன்தீப் சிங் பேடி, திருப்பூர் – டான்சி மேலாண் இயக்குனர் எஸ் விஜயகுமார் போன்றோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள் நீர் பாதுகாப்பு, தடுப்பணை கட்டுதல், ஊரணிகள், கிராம குட்டைகள், குடிமராமத்து, சிறுபாசன ஏரிகள், கோவில் குளங்கள் மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாசன ஏரிகள் போன்ற நீர்நிலைகளை புனரமைத்தல்,  போர் கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாத்தல் போன்ற அதிக அளவு மக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளும் பணிகளை கண்காணிப்பார்கள் எனவும் அரசின் முன்னோடி திட்டங்களை விரைவாக அமல்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் நிலுவையில் உள்ள அதிக அளவிலான பட்டா பரிமாற்றம் தொடர்பாக சிறப்பு முகாம் நடத்துதல். ஆக்கிரமிப்புகள் வரன்முறை படுத்துதல், சாலை, குடிநீர், தெரு விளக்கு, திடக்கழிவு, மேலாண்மை, கழிவறை, குடியிருப்பு பகுதிகளை சுத்தப்படுத்துதல் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருதல் உள்ளிட்ட பணிகளை செய்வார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply