12 ஏக்கர் நிலத்தை….” விற்றே குடித்த கணவன்”… ஆத்திரத்தில் மனைவி செய்த காரியம்..!

மதுப்பழக்கத்தால் சொத்துக்களை விற்று குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்ட கணவனை கொன்றுவிட்டதாக மனைவி வாக்குமூலத்தில் கூறினார் .

சேலம் மாவட்ட அயோத்தியாபட்டணத்திற்கு அடுத்துள்ள  வெள்ளியம்பட்டிகிராமத்தை சேர்ந்தவரான 42 வயதுடைய வேதகிரி என்பவரின் மனைவி 38 வயதுடைய சித்ரா. இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.  வேதகிரி விவசாய தொழில் செய்து வந்தார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்த குடிப்பழக்கத்தால் தனது 12 ஏக்கர் நிலத்தை விற்று செலவு செய்து வந்தார்.

தினமும்  குடித்து விட்டு மனைவி மற்றும் தாயாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். வேதகிரி கடந்த 1 ஆம் தேதி வழக்கம்போல் மது போதையில் வந்து இருவரிடமும் ரகளையில் ஈடுபட்டபோது, இவரது மனைவி மற்றும் 60 வயதான தாய் ராஜேஸ்வரி இருவரும் வேதகிரி கழுத்தை  துண்டால் இறுக்கியுள்ளனர். இதனால் ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவலறிந்த காரிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேதகிரியை  சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அவரது மனைவியிடம் விசாரணை நடத்தியபோது, அவர் கணவன் குடிப்பழக்கத்தால் தன்னுடைய 12 ஏக்கர் நிலத்தை விற்று ஊதாரியாக செலவு செய்ததாகவும், எங்களை மிகவும் கொடுமைப்படுத்தி துன்புறுத்தி வந்ததாகவும் கூறினார்.

இதனால் வழக்கம் போல் கடந்த 1ஆம் தேதி குடித்துவிட்டு வந்த போது கொலை செய்வதற்காக அவர் கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்தோம். இதை மறைக்க அதிக குடிபோதையில் உயிரிழந்து விட்டார் என்று, அக்கம்பக்கத்தினரிடம்  தெரிவித்தோம். அதற்குள் போலீசார் எங்களை கைது செய்தனர் என்று கூறினார். இதனால் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *