தமிழகத்தில் 10 -12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அனைவரும் கட்டாயம் இமெயில் வைத்திருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது பற்றி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்த ஆண்டு பிளஸ் 2 பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் ஓர் ஈமெயில் ஐடியை உருவாக்க அனைத்து தலைமை ஆசிரியர்களும் வழி காட்ட வேண்டும். இந்த மெயிலில் இருந்து [email protected] என்ற மெயில் ஐடிக்கு உயர் கல்வியில் மாணவர்களின் இலக்கு பற்றி விவரத்தை அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளது.