‘12த் ஃபெயில்’ படத்தின் உண்மை தம்பதிகளை சந்தித்த ஆனந்த் மஹிந்திரா, “இவர்கள்தான் இந்நாட்டின் உண்மையான பிரபலங்கள்” என பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில், “நான் அவர்களிடம் ஆட்டோகிராஃப் கேட்டபோது அவர்கள் வெட்கப்பட்டனர். அந்த ஆட்டோகிராஃபை நான் பெருமையுடன் வைத்திருப்பேன்.
இவர்கள் இருவரும் உண்மையான ஹீரோக்கள். இன்று அவர்களுடன் மதிய உணவருந்தினேன் என்று பதிவிட்டுள்ளார். 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத காதலரை ஊக்குவித்து IPS ஆக்கும் உண்மை கதையே ’12த் ஃபெயில்’ திரைப்படம்.