12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு…? – அரசு பரபரப்பு தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்  பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டது. பின்னர் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இல்லாமலேயே அல்பாஸ் என்று தமிழக அரசு அறிவித்தது.

ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படும் என்று கூறியுள்ளது. இந்நிலையில் கொரோனா வேகமெடுத்து வருவதால் 9-11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வேகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் வரும் ஏப்ரல் 7ஆம் தேதிக்கு பிறகு பிளஸ் டூ நேரடி வகுப்புகளை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின் ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்று மேலும் மே 23ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு ஜூன் முதல் ஜூலை மாதத்திற்கு தள்ளி போகலாம் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.