118 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து…? அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

சேலம் மாவட்டத்தில் வாகன விபத்துகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனால் சேலம் மாநகரில் இருக்கும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனைகள் ஈடுபட்டு, போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கின்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது, விதிமுறைகளை மீறி செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 118 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ம3 மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே விபத்துகளை தடுக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கூறியுள்ளனர்.