ஒரே நாளில் 113 பேர் பலி….. வேட்டையாடும் கொரோனா…. கதறும் ஈரான் ….!!

கொரோனா வைரஸ் தாக்குதலால் ஈரானில் ஒரே 113 பேர் உயிரிழந்த சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரான் நாளுக்கு நாள் வேகமாக உலகம் முழுவதும் பரவியது. 141 நாடுகள் வரை பரவியுள்ள இந்த தொற்றால் 152,428க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,720க்கும் அதிகமோர் உயிரை பழிவாங்கிய இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் பல்வேறு அறிவுறுத்தலை உலக நாடுகளுக்கு வழங்கி வருகின்றது.

சீனா , இத்தாலியை தொடர்ந்து அதிக பாதிப்பை கொண்ட நாடான ஈரானில் 12,729 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் 113 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 724 ஆக அதிகரிப்பு அதிகரித்துள்ளது. மேற்கு ஆசிய நாடுகளில் கொரோனா பாதிப்பின் மையப்புள்ளியாக ஈரான் உள்ளது. ஈரான் அனைத்து நாடுகளிடமும் உதவி கோருவது குறிப்பிடத்தக்கது.